பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: கவர்னருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு?

சென்னை: 

ருப்புக்கோட்டை செங்குந்தர்  கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் என ஒவ்வொரு வரும் தனித்தனியாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை இன்று திடீரென சென்னை வந்து ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன..

கல்லூரி மாணவிகளை சொகுசு வாழ்க்கைக்கும், அதிக மதிப்பெண் கிடைக்கும் என்றும் ஆசை காட்டி  தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்ற கல்லூரி பேராசிரியை பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க  மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் செல்லதுரை சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் பன்வாரிலாலிடம், நிர்மலாதேவி  விவகாரம் குறித்து விளக்கமளிக்க இருப்பதாகவும்,    மேலும், பேராசிரியை விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் விசாரணை மற்றும் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம், துணை வேந்தர் செல்லதுரை எடுத்துரைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.