நிர்மலா தேவி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

--

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பாலியல் ரீதியாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். நிர்மலா தேவிக்கு 23-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விருதுநகர் 2வது மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி விருதுநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கருப்பசாமியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 25-ம் தேதி நடக்கிறது.