நிர்மலாதேவி மீது குற்றப்பத்திரிகை: விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல்

விருதுநகர்:

ருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாய பணியாற்றி வந்த நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படித்து வரும், மாணவிகளை தவறான வழிக்கு அழைப்பு விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில்,  நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வரை தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, இதுகுறித்து தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதேவேளையில், ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டார் தனியாகவும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனிநபர் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தில் வழக்கு 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு குறித்து, வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், 1160 பக்க குற்றப்பத்திரியைவிருதுநகர் விசாரணை நீதி மன்றத்தில்  தாக்கல் செய்துள்ளனர்.