நிர்மலா தேவி – நக்கீரன் விவகாரம்: அச்சுறுத்தல்களை சகித்து கொள்ள முடியாது என ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை சம்பந்தப்படுத்தி நக்கீரன் பத்திரிகையில் தொடர் வெளியான விவகாரத்தில், ஆளுநருக்கு நேரடியாகவோ, மறைமுகமாக கொடுக்கும் அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது என  ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

நக்கீரன் பத்திரிகையில்  மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிக்கும் தொடர்பு இருக்கதாக செய்தித்தொடர் வெளியாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கவர்னர் மாளிகை புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை சிறையில் அடைக்க மறுத்து நீதிமன்றம் ஜாமினில் விடுதலை செய்ததது.

இந்த நிலையில்,  ஆளுநரையோ, ஆளுநரின் செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துஉள்ளது.

இதுகுறித்து  . ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிர்மலா தேவி விவகாரத்தில்  சட்டப்பூர்வ விசாரணை நடந்து வந்ததால் 6 மாதத்திற்கும் மேலாக ஆளுநர் மாளிகை மவுனம் காத்து வந்தது. ஆனால் இந்த விஷயத்தில் உண்மையை அறியாமல் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலாதேவி வந்ததே இல்லை. ஆளுநரையோ, அவரது செயலாளர் மற்றும் அதிகாரிகளையோ அவர் சந்திக்கவில்லை. நக்கீரன் வெளியிட்ட தகவல்  முழுக்க பொய்யான தகவல், ஒரு சதவீதம் கூட உண்மையில்லை.  விமர்சனங்களுக்கும் ஒரு எல்லை உண்டு /

பத்திரிகைக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் தான். ஆனால் விமர்சனங்களுக்கு ஒரு எல்லை உண்டு. உண்மைக்கு மாறான தகவலை நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த தகவல் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை.

எந்த தொடர்பும் இல்லாத ஆளுநரை நிர்மலா தேவி விவகாரத்தில் சேர்த்து பேசுவது கண்டனத்திற்குரியது.

மாநிலத்தின் முதல் குடிமகனை தரம் தாழ்ந்து விமர்சித்ததால், நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆளுநர் மாளிகையின் மாண்பைகுறைக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது”

மதுரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கவில்லை.

நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை சரிபார்க்காமல் நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையை தெரிந்துகொள்ளாமல் நக்கீரனில் வந்த தகவல்களை சிலர் ஆதரிக்கின்றனர்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் மனு தரப்பட்டது.

மாநிலத்தின் முதல் குடிமகனை தரம் தாழ்ந்து விமர்சித்தால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும், ஆளுநர் மாளிகையின் மாண்பைக் குறைக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை இணைத்து பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
மேலும், உண்மை என்னவென்று விசாரிக்காமல் நக்கீரன் இதழ் ஆளுநர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறதுகாவல்துறை விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

ஆளுநருக்கு நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்து கொள்ள முடியாது. கண்ணியத்தை கெடுக்கும் செயல்களுக்கு ஆளுநர் அலுவலகம் ஒருபோதும் அடிபணியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.