விருதுநகர்:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாணவிகளை தவறான பாதிக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் அமைத்த சந்தானம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நிர்மலாதேவி சார்பில் விருதுநகர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிர்மலா சார்பில் வழக்கறிஞர் ராமநாதன், மதுரை வழக்கறிஞர் மகாலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த விருதுநகர்  நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி உள்ளது.

ஏற்கனவே நிர்மலாதேவிக்கு ஆதரவாக,  சாத்தூர் கோர்ட்டில் ஆஜரான  வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.