நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி:

ருப்புக்கோட்டை பேராசிரியை  நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட முடியாது  என்று  உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி உள்ளது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து சிபிஐ சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி,  கருப்பன், ஆராய்ச்சி மாணவர் முருகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஜாமின் வழங்க நீதி மன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் ஜெய், சுகின் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.