விருதுநகர்

ல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்றக் காவல் வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரியும் நிர்மலாதேவி தனது மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த முயன்றதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார்.    இந்த விவகாரத்தில் ஐ ஏ எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு அவரிடம் விசாரணை நடத்தினர்.

நிர்மலா தேவி அளித்த தகவலின் அடிப்படையில் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.  நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவு பெற்றது.    அதனால் அவர் இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விருதுநகர் குற்றவியல் நீதிபதி திலகேஸ்வரி இன்று நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவலை வரும் 23 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.   அதனால் நிர்மலாதேவி மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.