க்னோ

ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சுக்கு கருத்து ஒன்றும் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்ற வாரம் டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசினார்.   அப்போது அவர், “பத்ருதீன் அஜ்மல் தலைமையில் அசாம் மாநிலத்தில்  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக  முன்னணி என்னும் கட்சி இயங்குகிறது.  இந்தக் கட்சி பாஜகவை விட அதிக விகிதத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது.   இதற்கு முக்கிய காரணம் அசாமில் அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகை ஆகும்.   சீனாவின் ஆசியுடன் பாகிஸ்தான் வங்க தேசத்தவர்களை அசாம் மாநிலத்தில் குடியேற்றுகிறது.   அவர்களை வெளியேற்றி இந்திய மக்களை ஒருமைப்படுத்த வேண்டும்”  எனக் கூறினார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  பத்ருதீன் அஜ்மல் ராணுவ தளபதியின் பேசு அரசியல் நோக்கத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டினார்.    அதற்கு ராணுவத்தின் சார்பில் தளபதியின் பேச்சில் எந்த ஒரு அரசியல் நோக்கமோ மதச் சார்போ கிடையாது எனவும் இது நாட்டின் ஒருமைப்பாட்டையும் முன்னேற்றத்தையும் குறித்து பேசப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உ.பி.  மாநில முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துக் கொள்ள லக்னோ வந்தார்.  அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கருத்து கேட்டனர்.  அதற்கு அவர், “இது குறித்து ஏதும் கருத்து சொல்வதற்கில்லை.   யாரும் ஏதாவது சொன்னால்,  அல்லது யாராவது எதைப்பற்றியாவ்து பேசினால் நான் அதற்கு என்ன கருத்து சொல்ல முடியும்?”  என  பதில் அளித்துள்ளார்.