நவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி : நிர்மலா சீதாராமன் பாராட்டு

பாலசோர், ஒரிசா

நேற்று இந்தியா தனது நவீன அஸ்திரா எவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது.

இந்தியாவின் நவீன ஏவுகணையான அஸ்திரா ஏவுகணை புதிய தொழில் நுட்பத்துடன் அமைக்கப் பட்டுளது.   இந்த ஏவுகணை வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்த ஏவுகணை 7 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.   அதில் பல முறை வெற்றி அடையாமல் இருந்தது

நேற்று ஒரிசா மாநிலம் பாலசோரில் அமைந்துள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ் யு 30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.   ஒரு ஆளில்லா விமானத்தை பறக்க விட்டு அதை நோக்கி அஸ்திரா செலுத்தபட்டது.  அஸ்திரா அந்த ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இந்த சோதனை வெற்றி அடைந்ததற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.   பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய விமானப்படை பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.