துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மறுப்பு

டில்லி:

மிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு  திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் டில்லியில் முகாமிடும் ஓபிஎஸ் அங்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிமுகவில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டில்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,   இது மரியாதை நிமித்தமான பயணம். அரசியல் ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ டில்லி வரவில்லை.என் சகோதரர் நோய்வாய்பட்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் வழங்கி நிர்மலா உதவினார். அதற்கு நன்றி தெரிவிக்க டில்லி வந்தேன் என்றார்.

மேலும் தற்போது , லோக்சபா தேர்தலுக்கான சூழல் உருவாகவில்லை. அறிவிப்பு வந்தவுடன் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.

ஓபிஎஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாவை சந்திக்க இருப்பதாக கூறிய நிலையில்,  அவரது கூறியது பொய் என்று நிர்மலா சீத்தாராமன் அலுவலகம் கூறி உள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை மைத்ரேயன் எம்பியை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் அலுவலக தரப்பில் விளக்கம்

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியின் தூதரும், ராஜ்யசபா எம்பியுமான புபீந்தர் யாதவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கின் போக்குகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்  சமீபத்தில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நடைபெற்ற  வருமானவரிச்சோதனைகள் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாகவே ஓபிஎஸ் டில்லி சென்றதாகவும் தகவல்கள்  கூறுகின்றன.

ஆனால், ஓபிஎஸ்சோ நிர்மலா சீத்தாராமனை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், நிர்மலா சீத்தாராமன் அலுவலகமோ, ஓபிஎஸ் சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளதும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.