பாதுகாப்புதுறை அமைச்சரானார் நிர்மலா

--

 

டில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 2 வது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக இந்த பொறுப்பை வகித்தவர் மறைந்த இந்திரா காந்தி. பிரதமராக இருந்த அவர் கூடுதலாக பாதுகாப்புத்துறையையும் வகித்தார்.

மத்திய பாஜக அரசின் அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் நிர்மலா, நக்வி, தர்மேந்திர பிரதான், பியூஸ்கோயல் ஆகியோர் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டனர். 9 பேர் இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.அவர்களுக்கான இலாகா விவரங்கள் :
நிர்மலா சீதாராமன்:  பாதுகாப்புத்துறை
சுரேஷ் பிரபு:  வர்த்தகத்துறை
பியூஸ்கோயல்: ரயில்வே துறை
ஸ்மிருதி இரானி: தகவல் மற்றும் தொழில்நுட்ப இலாகா.

மேலும், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் கட்காரியிடம் கங்கை நதி சுத்தகரிப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
தர்மேந்திர பிரதான்:  திறன் மேம்பாடு, பெட்ரோலியம்
உமாபாரதி:  குடிநீர் பராமரிப்பு துறை,
ஆர்கே சிங்: -எரிசக்தி துறை(தனிப்பொறுப்பு)
அல்போன்ஸ்:  சுற்றுலா துறை
ஹர்தீப் புரி:  நகர்ப்புற வளர்ச்சி