டில்லி:

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் பாலியர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட  நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்த  முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

ல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பேராசிரியர் முருகன்,ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு கீழ் நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதி மன்றம் வரை ஜாமின் கொடுக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் ஜாமின் கோரி மனு  தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் வந்தபோது, ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க  தமிழக அரசிற்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களின்  ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற் றது. அதைத்தொடர்ந்து முருகன், கருப்பசாமிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.