செல்ஃபி எடுத்த சிறிதுநேரத்தில் தாயாரை இழந்த இலங்கைப் பெண்

கொழும்பு: ‘நாங்கள் ஈஸ்டர் நாளின் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று தன்னுடைய குடும்ப செல்ஃபி புகைப்படத்தை, ஒரு இலங்கைப் பெண், முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களில், அவருடைய தாயார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கிறார்.

நிசாங்கா மாயாதுன்னே என்ற அந்த இலங்கைப் பெண்ணின் தயார் பெயர் ஷாந்தா மாயாதுன்னே, இலங்கையின் ஒரு புகழ்பெற்ற சமையல் கலைஞர் மற்றும் சமையல் கலை பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவர்கள், தங்களின் குடும்பத்துடன், ஷாங்க்ரி லா ஹோட்டலில் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோதுதான் அந்த செல்ஃபி எடுக்கப்பட்டது.

முகநூலில் நிசாங்கா தனது பு‍கைப்படத்தை பதிவிட்ட நேரம் காலை 8.47. ஆனால், அடுத்த சிறிதுநேரத்தில் அந்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்து விட்டிருக்கிறது.

– மதுரை மாயாண்டி