‘நிசப்தம்’ அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது….!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ” ‘நிசப்தம்’ படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.

தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்” என்று இயக்குநர் ஹேமந்த் மதுகர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்வி குறியாகவே நிற்க , நிசப்தம் திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. ஹேமந்த் மதுகர் இயக்கிய நிசப்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.