வசமாக சிக்கிய பாலா ; நேரடியாக பாலாவிடம் மோதும் அர்ச்சனா….!

பாலாஜி நல்லவர் போல ஆரியிடம் பேசி நானும் தான் ரியோவை முதுகுல சுமந்தேன் என ஸ்கெட்ச் போட்டார். இந்த அன்பான பேச்சு மறுநாள் நாமினேஷன் போது ஆரிக்கு எதிராக திரும்பியது. இதில் ஆரம்பித்த பஞ்சாயத்து பின்னர் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ளும் அளவுக்கு சென்றது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் ‘யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன்’ என்று பாலாவிடம் அர்ச்சனா நேரடியாக கேள்வி கேட்கிறார். அதற்கு பாலா மறைக்காமல் உண்மையை பகிர்ந்துள்ளார்.

அதன் பிறகு பாலா மற்றும் கேபி, அர்ச்சனா இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. பாலா கூறும்போது “என் பேரை காலி பண்ண தான் எல்லாரும் இப்படி பேசுறீங்க” என்று கூறுகிறார். அதற்கு “அர்ச்சனா இனிமேல் என்னை அக்கா என்று அழைக்காதே. நான் உனக்கு அக்கா இல்லை” என்று கோபத்தில் பேசுகிறார்.