குடியரசு தினத்தன்று, சீக்கிய விவசாயிகளால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடிக்கு ஒரு தனி வரலாறு உண்டு.

கடந்த 1783ம் ஆண்டு நடைபெற்ற போரில், கால்சா வீரர்களைக் கொண்ட சீக்கிய ராணுவம், முகலாய அரசைத் தோற்கடித்து, செங்கோட்டையில் தனது கொடியான நிஷான் சாஹிப்பை பறக்கவிட்டது. பகேல் சிங் மற்றும் ஜஸ்ஸா சிங் அலுவாலியா ஆகிய இருவரும் சீக்கிய ராணுவத்திற்கு தலைமை தாங்கினர்.

இந்திய வரலாற்றில், அந்த வெற்றி கொண்டாட்டம் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது. அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில், இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர் என அனைவரும் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8 மற்றும் 9ம் தேதிகளில், டெல்லியில் ‘வெற்றி நாள்’ கொண்டாட்டம் நிகழ்த்தப்பட்டது. அது மிகப்பெரியதொரு நிகழ்வாக அமைந்தது.

இதனையடுத்து, தற்போதைய போராட்டத்தின் அடையாளமாக ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடியிலும் ஒரு முக்கிய அர்த்தம் பொதிந்துள்ளது. கடந்த 18ம் நூற்றாண்டில் டெல்லி ஆட்சியின் கொடுமையை எதிர்த்து போராடி, சீக்கியர்கள் வெற்றி கண்டனர்.

அதேபோன்று, இப்போது டெல்லியின் கொடுங்கோன்மை மோடி அரசை எதிர்த்தும் சீக்கியர்கள் வெற்றி காண்பார்கள் என்பதாக அந்தக் கொடியேற்ற நிகழ்வு அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.