‘த்ரிஷ்யம்’ இயக்குனர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி….!

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கான், ஷ்ரேயா மற்றும் தபு நடிப்பில், அப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கியவர் நிஷிகாந்த் காமத்

இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தை இந்தியில் ரீமேக் செய்த இயக்குநர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.