மருத்துவத்துகான மாநில நிதி உதவியை உயர்த்த வேண்டும் : நிதி ஆயோக் உறுப்பினர்

--

சென்னை

மாநில அரசுகள் மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை 8% ஆக்க வேண்டும் என நிதி அயோக் உறுப்பினர் கூறி உள்ளார்.

சென்னை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  அதில் நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே பால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  83 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கி உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “இந்தியா மருத்துவத் துறையின் இன்னும் சற்று பின் தங்கியே உள்ளது.   இதை இளம் மருத்துவர்கள் தான் மாற்றா வேண்டும்.  உயிரி மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபடவேண்டும்.   நாடு முழுவதும் மக்களின் அடிப்படை மருத்துவத்தை வழங்க 15 லட்சம் மருத்துவ மையங்கள் உள்ளன.  இது அதிகமாக வேண்டும்.

அதற்கு மருத்துவத்துக்கான நிதி உதவியை மத்திய மாநில அரசுகள் அதிகரிக வேண்டும்.   பெரும்பாலன மாநிலங்கல் மருத்துவத்துக் 4.5%லிருந்து 5% வரை நிதி ஒதுக்குகின்றன.   அதை 8% ஆக உயர்த்த வேண்டும்.” என அவர் கூறி உள்ளார்.