தெலுங்கில் வலம் வரும் இளம் ஹீரோ நிதின். எ ஏ, தில், ஹார்ட் அட்டாக், ஸ்ரீநிவாசா கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பீஷ்மா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நிதினுக்கும் ஷாலினி என்பவருக்கும் கடந்த 2 மாத்ததுக்கு முன் நிச்சயதார்த் தம் நடந்தது. திருமணத்தை கோலாகல மாக துபாயில் ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு குறுக்கிட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு தடபுடல் திருமணம் நடத்த காத்திருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கு முடிவது போல் தெரியவில்லை தடபுடல் திருமணத்துக்கு அனுமதி கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. திருமணத்தை இன்னும் தள்ளிப் போடக்கூடாது என்று குடும்பத்தினர், இதையடுத்து அடுத்த முகூர்த்த்திலியே எளிமையாக திருமணத்தை நடத்தி முடிக்க முடிவு செய்தனர். வரும் 26ம் தேதி ஐதராபாத்திலேயே திருமணம் செய்ய ஏற்பாடாகி உள்ளது. ஊரடங்கு முடிந்த சகஜ நிலை திரும்பிய பிறகு திருமண வரவேற்னை பிரமாண்டமாக நடத்துகின்றனர்.