டில்லி

ட்டுனர் இல்லாமல் ஓடும் வாகனங்கள் இந்தியாவில் வந்தால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால் அதை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

அமெரிக்காவில் 1920களில் ஓட்டுனர் இல்லாமல் ஓடும் கார்கள் (அட்டானமஸ் கார்ஸ்) பற்றிய ஆராய்ச்சி துவங்கியது.  1980களில் அதற்கான மாடல் உருவாக்கப்பட்டது.  அது வெற்றியும் அடைந்துள்ளது.  ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் சில நாடுகளில் ஓடத் துவங்கியுள்ளன.

ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் ஜிபிஎஸ் இன் மல்டிபிள் இன்புட்,  இன்ஃப்ரா ரெட் ரேஸ்,, லேசர், கணினி தொழில்நுட்பம் ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கியது.   தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த வாகனங்கள் விபத்தை தவிர்க்க மிகவும் உதவும் என்றும், வாகன நெரிசல் இதனால் வெகுவாகக் குறையும் என்ரும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2015ஆம் வருடம், பிரதமர் மோடி இத்தகைய வாகன உற்பத்தியாளரான, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலோன் மஸ்க் ஐ சந்தித்தார்.  அப்போது இது போன்ற வாகனங்கள் இந்தியாவில் தயாரிப்பது பற்றி இருவரும் பேசினர்.  கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் தமது நிறுவனமும் ஓட்டுனர் இல்லாத வாகனம் உற்பத்தி செய்யும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, “ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் இந்தியாவில் அனுமத்திக்கப்பட மாட்டாது.  நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது.  ஒவ்வொரு வாகனமும் ஒரு ஓட்டுனருக்கு பணி அளிக்கிறது.  மேலை நாடுகளில் மக்கட்தொகை குறைவு, அப்படி இருப்பினும் சுவீடன் நாட்டில் ஒரு 70 வயதானவர் டாக்சி ஓட்டுவதை நான் பார்த்துள்ளேன்.  இங்கு நம் நாட்டில் இது போன்ற வாகனங்களை அனுமதித்தால் மேலும் பலர் வேலை இழப்பார்கள்  ஓட்டுனர் இல்லாத வாகனங்களுக்கு அரசு அனுமதி தரக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது” என்றார்.