நடுத்தர வகுப்பினருக்கு புதிய சுகாதார திட்டம்! நிதிஆயோக் பில்கேட்ஸ் இணைந்து அறிக்கை வெளியீடு

டெல்லி,

டுத்தர வகுப்பினருக்கு சுகாதார திட்டம் குறித்த அறிக்கையை, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமாருடன் இணைந்து அந்த  பில்கேட்ஸ் வெளியிட்டார்.

பிரபல கணினி சாப்ட்வர் நிறுவனமான மைக்ரோ சாப்ட் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை, சுகாதாரத்தை வலியுறுத்தி உலக நாடுகளுக்கு நிதி உதவி செய்து வருகிறது. அதன்படி, இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பின்னர்  ‘நிதி ஆயோக்’ அமைப்பின் ‘புதிய இந்தியாவுக்கான சுகாதார திட்டம்’ என்ற அறிக்கை வெளியீட்டு விழா வில் கலந்துகொண்டு, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமாருடன் இணைந்து அந்த அறிக்கையை பில் கேட்ஸ் வெளியிட்டார்.

இந்த விழாவில்,   நிதி ஆயோக் ஆலோசகர் (சுகாதாரம்) அலோக் குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது,   இந்தியாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற சுகாதார திட்டம், ஏழை மக்களுக்காக உள்ளது. 50 கோடி பேர் அதில் பலன் அடையலாம். பணக்காரர்கள், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், நடுத்தர வகுப்பினருக்குத்தான் பொது சுகாதார திட்டம் எதுவுமே இல்லை. அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி, மருத்துவ செலவுகளுக்கே சரியாகி விடுகிறது. எனவே, அவர்களுக்காக ஒரு சுகாதார திட்டம் தொடங்க நிதி ஆயோக் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்துக்காக, ரூ.200 அல்லது ரூ.300 செலுத்துவது நடுத்தர வகுப்பினருக்கு சுமையாக இருக்காது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய  பில்கேட்ஸ், இளம் தலைமுறை காரணமாக, இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று கூறினார்.

நிகழ்ச்சி முடிந்ததும், பில்கேட்ஸ்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்த்தனைசந்தித்து பேசினார். அப்போது, அவர்கள் முன்னிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும், பில் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமாருடன் இணைந்து அந்த அறிக்கையை பில் கேட்ஸ் வெளியிட்டார்.

அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துதல், பிரசவ மரணங்களை கட்டுப்படுத்துதல், ஊட்டச் சத்து பற்றாக்குறையை போக்குதல் உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் பணிகளுக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.