சென்னை

மிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை போக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவது தெரிந்ததே.  காவிரியில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கர்நாடக அரசால் தர மறுப்பதும் அதற்காக வழக்கு தொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.  இதில் பல கட்சிகளும் மாநிலத்துக்கு மாநிலம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.  அதன்படி நதிநீர் இணைப்பு திட்டம் ஒன்றை உடனடியாக செயல் படுத்தி தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சம் போக்கப்படும் என கூறி உள்ளார்.  தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடந்த கூட்டத்துக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதை தெரிவித்துள்ளார்.

கோதாவரியில் வீணாகும் உபரி நீரை கிருஷ்ணா, நதி, பென்னாரு நதி மூலமாக காவிரியுடன் இணைக்கப் போவதாக இந்த திட்ட அறிவிப்பில் காணப்படுகிறது.  இது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா மற்றும் தெலுங்கானா மாநில தொழில்நுட்ப அதிகாரிகளுடனும் முதல்வர்களுடனும் விரைவில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 300 டி எம் சி நீர் கோதாவரியில் இருந்து போலாவரம், நாகர்ஜுன சாகர் வழியாக கிருஷ்ணா நதிக்கு வரும்.  பிறகு அந்த நீர் பென்னாறு நதியில் உள்ள சோமசீலா அணைக்கட்டு வழியாக கல்லணைக்கு வந்து சேரும்.  இதற்கான செலவில் 90% மத்திய அரசும் மீதமுள்ள 10% தொகையை மத்திய அரசும் பிரித்துக் கொள்ளும்.  இதற்கு கர்னாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்தால் மத்தியப் பிரதேசத்தில் ஓடும் இந்திராதேவி ஆற்றின் உபரி நீரை நேரடியாக கர்னாடகா வழியாக வராமல் வேறு திசையில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர மாற்று திட்டம் உள்ளதாகவும் கட்காரி அறிவித்துள்ளார்.