விஜய் ரூபானி/ நிதின் படேல் குஜராத் புதிய முதல்வர் ? : இன்றுமாலை எம்.எல்.ஏ. கூட்டம்

குஜராத் -அகமதாபாத் -தால்தேஜ்-ல் உள்ள அமித் ஷாவின் இல்லம் நேற்று முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. வயது மூப்பை காரணம் காட்டி ஆனந்திபென் பட்டேல் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்தார். இது குறித்து, “ஆனந்தி பென் ராஜினாமா, பாஜகவின் செல்ஃப்-கோல்” எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதனைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் எனும் குழப்பம் நீடித்து வருகின்றது.
சரிந்து வரும் பாஜகவின் மதிப்பைத் தூக்கி நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் அமித் ஷா -மோடி இரட்டையர்கள் கூட்டணி உள்ளது.
செவ்வாய்க்கிழமை, டெல்லியில் நடந்த பாஜக பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதம்ர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் கலந்துக் கொண்டனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டேவை மத்தியப் பார்வையாளர்களாய் நியமித்ததுடன், எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமித் ஷாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமித் ஷா நேற்று முதல் முழுவதும் பல்வேறு தலைவர்களைத் தனித்தனி குழுக்களாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.

shah
முதலில் அமித் ஷாவே முதல்வர் போட்டியில் இருந்ததாகத் தகவல் கசிந்தது. பிறகு, அவர் தேசியத் தலைவராய் கட்சியைச் சிறப்பாய் வழிநடத்துவது தொடரும் என்று கூறப்பட்டது
அதே போல், 2014ல் மோடி பிரதமரானபோது வெகுவாய் பேசப்பட்ட புருஷோத்தமன் ரூபலாவின் பெயரும் தற்போது போட்டியில் இல்லை.
ராஜ்யசபை உறுப்பினராக இருக்கும் ரூபலா, சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது விவசாயத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனவே அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பாஜக குஜராத் மாநிலத் தலைவர் விஜய் ரூபானி முதல்வராக ஆனந்திபென் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்.
பாஜக குஜராத் மாநிலத் தலைவர் விஜய் ரூபானி யார் புதிய முதல்வர் எனத் தெரிவிக்க மறுத்து விட்டார், வழக்கப்படி, எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி அவர்களின் முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்”அது எம்.எல்.ஏ.க்களின் உரிமை” என்றார்.
பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் யார் முதல்வர் என்பதை பாஜக ரகசியமாக வைத்துள்ளது. அதிருப்தியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபடக்கூடும் என்பதால் பாஜக தலைமை பயப்படுகின்றது.
குஜராத்தில் பட்டேல் ஜாதியினரின் ஆதிக்கம் அதிகம். எனவே பட்டேல் இனத்தைச் சேர்ந்த தலைவரிகளுக்குள் தான் போட்டியே. பாஜக மாநிலத்தலைவர் விஜய் ருபானி முதல்வர் பதவிப் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சமீப தினங்களாகக் குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நிதின் பட்டேல் சுறுசுறுப்பாக இயங்கி, பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்து வருகின்றார்.


மூத்த பாஜக தலைவர்கள், மற்றும் மற்ற அமைச்சர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு நிதின் பட்டேல் மட்டும் தான் முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் முதலில் உள்ளார்.
நிதின் பட்டேல் தான் முதல் என்பது சோற்றில் மறைத்த பூசணிக்காயாய் தெரிகின்றது.
எனினும், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிதின் படேல், ” கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூடி முதல்வரை முடிவு செய்வார்கள். பாஜகவின் உறுப்பினர் என்ற முறையில், எனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார்” எனத் தெரிவித்தார்.

மோடி முதல்வராக 2001ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது சாதியால்  அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அவரை ஹிந்துத்வா கொள்கையாளர் மற்றும் வளர்ச்சி யை விரும்புபவர் ஆகிய இரண்டின் கலவையாய் பார்த்து முதல்வராய் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால், இம்முறை, அப்பட்டமாக , பட்டிடார் எனும் பட்டேல் சமூகத்தினரின் கைப்பாவையாய் பாஜக மாறி வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையேல், பட்டேல் சாதித் தலைவர்கள் பாஜகவை கைவிட்டுவிடுவார்கள். எனவே அமித் ஷா ஆனந்தி பென் கைகாட்டிய
“நிதின் பட்டேலை தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே இன்று மாலை 4 மணிக்கு ” விஜய் ரூபனி அல்லது  நிதின் பட்டேல்” அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் வந்துள்ளது.

லேட்டஸ்ட்: விஜய் ரூபனி புதிய முதல்வராகத் தேர்வு

 

Leave a Reply

Your email address will not be published.