பாட்னா: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிதிஷ் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், ஆனால், நாங்கள் மக்கள் மனதில் அமர்ந்திருக்கிறோம் என்று ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களை  கைப்பற்றிய லாலு பிரசாத் மகனும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான  தேஜஸ்வியாதவ்,  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, தங்களது மகாபந்தன் கூட்டணி வெற்றியானது மாபெரும் கூட்டணிக்கான வெற்றி என்றும், மக்கள் எங்களுடன்தான் உள்ளனர் என்று  தெரிவித்தார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றி உள்ளது.  ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 125 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.  தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் மட்டும் 75 இடங்களை பிடித்துள்ளது. பல தொகுதிகளில் கடைசிக் கட்ட வாக்குப்பதிவின்போது, பல்வேறு குழப்பங்களும், தெளிவில்லாத சூழல்களும் இருந்ததாக லாலு கட்சி குற்றச்சாட்டுக்களை தெரிவித்துஉள்ளது.

இந்த நிலையில்,  மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த தேஜஸ்வி யாதவ்,  பீகார் சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தனிக்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உருவெடுத்து இருப்பதாகவும், ஆனால், தற்போது வேறு ஒருவர்  முதலமைச்சரின் நாற்காலியில் அமர்ந்தாலும், மக்களின்  ஆதரவு எங்களுக்கு ஆதரவாகவே  இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார். (ஆர்ஜேடி 75 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம் 43, பாஜக 74)

மகாபந்தனுக்கு (பெரும் கூட்டணிக்கு) ஆதரவாக வாக்களித்ததற்காக யாதவ் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியவர், மக்களின்  ஆணை மகாபந்தனுக்கு சாதகமாக இருந்தது, ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்.டி.ஏ-வுக்கு ஆதரவாக இருந்தது.  இது முதல் முறையாக நடக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில், மகாகத்பந்தன் உருவானபோது, ​​வாக்குகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் பாஜக அதிகாரத்தை தட்டிப் பறித்து என்று குற்றம் சாட்டினார்.

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டமே தேர்தல் என்று கூறிய தேஜஸ்வி,  மின்னணு வாக்குப்பதிவு (ஈ.வி.எம்) கணக்கிடப்படுவதற்கு முன்னர், தபால் வாக்குகளை எண்ணுவதற்கான நிறுவப்பட்ட விதிகள் குறித்து  கூறியவர், அனைத்து அஞ்சல் வாக்குகளும் கணக்கிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

நிதீஷ் குமார் பீகார் மாநில முதலமைச்சரின் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம் , ஆனால் அவரது கட்சிக்கு மக்களின் இதயத்தில் ஒரு இடம் உண்டு.  அவர் கடைசியாக பதவியில் அமர்வது, அதன்  புனிதத்துவத்தை அடகு வைக்கும் செயல், இது அவரது மனசாட்சியை உறுத்தும் என்றார்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியான நிதிஷ்குமார் கட்சி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.  இது மாற்றத்திற்கான  நேரம், ஆனால்,  நிதீஷ் குமார் முதலமைச்சரின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார், ஆனால் நாங்கள் மக்களின் இதயத்தில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.