நிதிஷ்குமார் அணிக்கு ‘அம்பு’ சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அங்கிகாரம்!!

டில்லி:

நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்துள்ளது.

பீகாரில் பாஜக.வுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்ததற்கு ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத்யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டணிக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இதனால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியின் அம்பு சின்னத்திற்கு உரிமை கேட்டு தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு அளித்தார்.

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் நிதிஷ்குமார் தலைமையில் உள்ள அணியே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்றும், கட்சியின் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை அவருக்கு உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் அம்பு சின்னம் அவருக்கு ஒதுக்கீடு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.