பாட்னா: மோடி அரசுடன் ஏற்கனவே பல விஷயங்களில் மோதிவரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அத்திட்டத்தை பீகாரில் எதற்காக அமல்படுத்த வேண்டுமென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம், நாடாளுமன்றத்தில் அவரின் கட்சி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஓட்டளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்த சட்டம் தங்களுக்கு எதிராக இருக்குமென சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாமெனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆதரிப்பீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அதை எதற்காக பீகாரில் கொண்டுவர வேண்டும்” என்று அவர் எதிர்கேள்வி கேட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநில அரசுகளிலேயே, பீகார் அரசுதான் இத்திட்டத்திற்கு முதன்முதலாக எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ்குமாரின் நிலையையே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் எடுத்துள்ளார்.