சென்னை: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை
9 மணி முதல் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை காலை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, புயலின் தீவிரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், மேலும் வலுவடைந்து உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

காலை 6 மணி முதல் அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். தற்போது காற்று வீசுவதால் விமான போக்குவரத்து 9 மணிக்கு தொடங்கப்பட் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.