நிவர் புயல்: சென்னை உள்பட மாவட்டங்களில் பொதுமக்கள் அவசர உதவிக்கு புகார் கொடுக்க உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் மற்றும் கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. அதன்படி,  சென்னை மக்கள் புகாரளிக்க வேண்டிய எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044- 2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

 

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயலால், சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர், நிவர் புயலால் சென்னைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, மக்களிடையே அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது. தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை, நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது .

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்களும் 600 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை மக்கள் 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இதுபோன்று மாநிலம் முழுவதும் புயல் மற்றும் கனமழை காரணமாக புகார் கொடுக்க அவசர தொலைபேசி எண்களை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.