நிவர் புயல்: மீட்பு பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரிககை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது.
12 மாவட்டங்களில் நிவர் புயல் மீட்புப்பணி, நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அன்பு,
திருவள்ளூருக்கு வனிதா,
விழுப்புரத்துக்கு சத்யப்பிரியா ஐபிஎஸ் நியமனம்
திருச்சி, பெரம்பலூர்மற்றும் அரியலூருக்கு ராஜேஸ்வரி,
கடலூருக்கு நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டைக்கு லலிதா லட்சுமி,
தஞ்சைக்கு செந்தில்குமாரி ,
திருவாரூருக்கு தமிழ்சந்திரன்,
நாகைக்கு ஜெயராம்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.