புதுச்சேரி: நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் வகையில்,  புதுச்சேரி, காரைக்காலில் வரும் 28ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்க கடலில்  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அதிதீவிர நிவர் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது,  மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது. இதன் காரணமாக  புதுச்சேரி, காரைக்காலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான  பகுதிகளில்  தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதால், நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த நிலையில், பல இடங்கள் கடுமையான சேதங்களை சந்தித்து உள்ளது.

இதையடுத்து, புயல் காரணமாக ஏற்கவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறையை வரும் 28ந்தேதி வரை நீட்டித்து, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.