சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட  `7 மாவட்டங்களில் 24-ம் தேதி மதியம்  முதல் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்துக்களும் முடங்கி உள்ளன. இதனால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னைக்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுநிலை, நாளை தீவிரப் புயலாக நிலைபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. `நிவர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல் நாளை மறுநாள் மதியத்துக்கு மேல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்துக்கு மேல் காற்றுவீசக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்தநிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில்  நேற்று மதியம்  மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காகப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால், பல மாவட்டங்களில் வாகனப் போக்குவரத்துஅடியோடு முடங்கி உள்ளது.

இதனால் நெடுஞ்சாலைகள் வாகனப் போக்குவரத்து  இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=sq-N7r0upoU&feature=youtu.be