சென்னை: நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தமிழகஅரசுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளது.
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதால்,   தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தைப் பொருத்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை, ராணுவம், தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தமிழகஅரசு அவசர கடிதம் எழுதி உள்ளது. அதில், நிவர் புயல் காரணமாக  பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளது.