சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வரும் நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்பட்டு, அனைத்து பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னை புறநகர் ரயில் சேவையும் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.