சென்னை:  நிவர் புயல் காரணமாக, அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தமிழக மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியது.  ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இநத நிலையில் புயல் சேதம் மற்றும் மின்துண்டிப்பு போன்றவற்றுக்காக  பொதுமக்கள் உடனே தொடர்புகொள்ளும் வகையில், மின்சார துறை சார்பில் நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 24 மணி நேர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,  நிவர் புயலால் கடல் சீற்றத்துடன் உள்ளதால் அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ வரக்கூடாது என்றும், கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வரவேண்டாம் என அடையாறு காவல் துணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.