சென்னை: நிவர் புயல் காரணமாக, தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறையை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே பணிபுரிவார்கள். புயல் கரையைக் கடக்கும் வேளையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காகவே விடுமுறை அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

 

நிவர் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் நாளை அரசு பொது விடுமுறை விடப்படுவதாகவும்,  தமிழகம் முழுவதும் நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்றும்  அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்றும் அறிவித்து உள்ளது.

மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும்,  மழை அதிகமாக பெய்தால் உபரி நீரை வெளியேற்ற செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து தான் ஆக வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

புயலால் சாயும் மரங்களை அப்புறப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்கவும், உதவவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.