நிவர் புயல்: தனியார் வானிலை ஆய்வாளர்களான வெதர்மேன், தகட்டூர் செல்வகுமார் என்ன சொல்கிறார்கள்…

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை வானிலை மையம் மட்டுமின்றி, இந்திய வானிலை மையமும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. தமிழகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதுன், பேரிடர் துறையையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயலால், சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  மேலும்  பல மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.  நிவர் புயல் சென்னை அருகே மகாபலிபுரம் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளதால், மக்களிடையே அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக, சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மற்றும் தகடூர் செல்வக்குமார் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

வெதர்மேன் பிரதீப் ஜான்:

 நிவர் புயல் காரணமாக  தமிழ்நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்.  நிவர் புயல் இன்று  மேலும், தீவிரம் அடையும் என்றும் பலவீனமடைவதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக நாகை முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.  தமிழகத்தில் சென்னையை தவிரவேறு இடங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

தகட்டூர் செல்வகுமார்

“வங்ககடலில் நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர்புயலாக மாறி உள்ளது. தற்போது, இந்த புயல்  இது சென்னைக்கு அருகே தற்போது மேற்கு நோக்கி நகர்கிறது.  5 கி,மீ. வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.. இப்போது சென்னைக்கு தென்கிழக்கே 435 கி.மீ. நிலைகொண்டுள்ளது. புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 410 தொலைமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு, சற்று தென்கிழக்கே 400 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி வளைந்து  புதுச்சேரி பக்கம் நகரும் என்று அரசு எதிர்பார்த்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது.  ஆனால் எனது ஆய்வின்படி, புயல்  டர்ன் இல்லாமலேயே நேராகவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அரசு சொன்ன கருத்துக்கு நாம் எப்போதுமே எதிர் கருத்து சொல்ல கூடாது என்று உஷாராக தெரிவித்துள்ளவர்,  அதனால் மக்கள் குழம்பிவிடுவார்கள்.. அதனால், நாகப்பட்டினம் முதல் மாமல்லபுரம் வரை என சேர்த்திருந்தால்,பிரச்சனை இருக்காது.  எனது கணிப்பின்படி, நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்றார். இந்த புயல் பெரும்பாலும் மாமல்லபுரம் வரை செல்ல வாய்ப்பில்லை.. காரைக்காலுக்கு தெற்கு புறம்தான், அதாவது நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, அல்லது காரைக்கால் இங்குதான் புயல் கரையை கடக்கும்.

இந்த புயலால் பயப்பட ஒன்றுமே இல்லை என்று கூறியவர், இந்த புயலின் அளவானது மொத்த 150 ஆரம், 350 விட்டம் ஆகும். புயலானது, நாகப்பட்டினத்துக்கும், மாமல்லபுரத்துக்கும் நடுவில்தான் கரையை கடக்க போகிறது.. சென்னைவாசிகள் பயப்பட வேண்டாம்.

புயலின் தாக்கம், இன்று  இரவைவிட நாளை பகல், இரவுதான் அதிகமான மழை இருக்கும்.. கரையை புயல் செயலிழக்கும்போதுதான், இந்த மழை அதிகமா பொழியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிவர் புயல் என்ன செய்யப்போகிறது, எங்கே கரையை கடக்கப்போகிறது என்பதை இன்னும் 32 மணி நேரத்தில் தெரிய வரும்.