நிவர் புயல் அதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும்.. தேசிய பேரிடர் மீட்பு படை தகவல்

டெல்லி: நிவர் புயல் கடலூர் அருகே 80 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதால், புயல் கரையை கடக்கும் நேரம் தாமதமாகி வருகிறது. அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் என். என். பிரதான் கூறியுள்ளார்.

தமிழகம் மட்டும் புதுச்சேரியை மிரட்டிவரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இதனால் கடற்கரையோரங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில்,   செய்தியாளர்களை சந்தித்த தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் என். என். பிரதான், புயல் கரையை கடக்கும் நேரம் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

நிவர் புயலின் சவாலை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியவர்,  நள்ளிரவே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாலை 2 மணி வாக்கில் கடக்கும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், நிவர் புயல் காரணமாக,  தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். புதுவையில் 1000 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.