நிவேதா பெத்துராஜின் ‘WHAT THE UFF’ பாடல் வெளியீடு….!

தமிழ்த் திரையுலகில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் போலி ட்விட்டர் கணக்கு உருவானது குறித்து பேசியிருந்தார் நிவேதா பெத்துராஜ். இந்த விஷயம் பெரிதளவில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது What the Uff என்ற பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். திங்க் ஒரிஜினல்ஸ் இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இந்த பாடலை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஹரிகா நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார். இந்த பாடல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.