4 வருட நினைவில் மூழ்கிய ரஜினி. கமல் மகள்..

பாபநாசம் படத்தில் கமலுக்கும், தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் 4 வருட நினைவை பகிர்ந்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:
‘4 வருடத்துக்கு முன் இதே நாளில் நான் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானேன். புதிய மொழி ஒன்றை கற்றேன். பல்வேறு மனிதர்களை சந்தித்தேன் வெவ்வேறு திறமைகளை வளர்க்கத் தொடங்கினேன். கதை, சினிமா, விவாதம். எண்ணங்கள்பகிர்வு, வசனம், கேள்வி, கதாபாத்திரம், அறிவு, ஸ்கிரிப்ட் இப்படி பல விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இந்த உலகம் (சினிமா)எனக்கு பிடித்திருக்கிறது. அதை விடாமல் இறுக்கமாக கட்டித் தழுவிக் கொண்டேன். ஏப்படி இருந்தாலும் இந்த 4 வருடம் எனக்கு நல்லவிதமாக அமைந்தது. இன்னும் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் சினிமா வழியா ரசிகர்களை சந்திக்க காத்திருக்கிறேன் எல்லவாற்றுக்கும் நன்றி
இவ்வாறு நிவேதா தாமஸ் கூறி உள்ளார்.