‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் தாப்ஸி கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ்…..!

‘பிங்க்’ தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார் போனி கபூர்.

தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கவுள்ளார் போனி கபூர். ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ள இந்த ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளார் பிங்க்’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.

இதில், மிக முக்கியமான தாப்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா தாமஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ‘பிங்க்’ ரீமேக், பவன் கல்யாணுடன் நடிப்பது என்பதால் அவரும் சந்தோஷமாக சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.