சிறுவயது க்யூட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிவேதா தாமஸ்….!

--

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் நிவேதா தாமஸ். இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், ‘இதே நாளில் 4 வருடத்திற்கு முன்னர் தெலுங்கில் அறிமுகமானதை நினைவுகூர்ந்துள்ள இவர், அதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் எனவும் நிவேதா தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.