‘சரக்குவாரி பாட்டா’ படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையும் நிவேதா தாமஸ்….!

கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு .

இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘சரக்கு வாரி பாட்டா’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.