மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நிவின் பாலி. பிரேமம் படத்தின் மூலம் இவர் தமிழில் பெரும் ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ளார்.

நிவின் பாலியின் மேக்கப் மேனாக இருந்த ஷாபு புல்பள்ளி என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் . கிருஸ்துமஸ் பண்டிகைக்காக மரத்தின் மீது ஸ்டார் கட்ட ஏறிய இவர், தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.