பஞ்சாப்: அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்தில் ஏராளமானோர் பலி

ஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சற்று முன் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் பலியானார்கள்.

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

அங்கு தசரா கொண்டாட்டத்தின் போது மக்கள், ரயில்பாதையை ஒட்டி ராவண வதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் ரயில் பாதைக்கு அருகேயே வைத்து ராவண உருவத்தை கொளுத்தினார்கள். அப்போது அதில் இருந்து வெடிகள் வெடித்ததில் மக்கள் பயத்தில் சிதறி ரயில் பாதையை நோக்கி ஓடியுள்ளார்.

அந்த நேரத்தில் ரயில்  அந்த இடத்தை கடந்தது. தண்டவாளத்தில் இருந் மக்கள் மீது ரயில் மோதியது.  இந்த விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்கள்.

மேலும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அமிர்தசரஸ் அருகே சவுரா பஜார் என்ற பகுதியில் நடந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள், “தசரா கொண்டாட்டத்துக்கு  உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை. ரயில் பாதை அருகே கொண்டாட்டம் நடத்த அனுமதித்திருக்கக் கூடாது.  குறைந்தபட்சம் ரயில் வரும் நேரம் அறிந்து எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.