சூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை!

அன்புள்ள பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு
நாளை மாலை 7.30 மணி அளவில் சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் அவர்கள் சூழலியல் திரிபும், நோய் பரவலும்… என்ற தலைப்பில் நம்மிடையே இணையம் வழியே உரையாற்றுகின்றார்.
நேரம் 27.03.2020 மாலை.7.30 மணி

முனைவர் நா.கண்ணன் பழைய இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூவணம் என்ற கிராமத்தில் பிறந்து அங்கேயே பள்ளி இறுதிவரை தமிழ் மொழியில் கற்றவர். எனவே தமிழ் மொழி முதல் மொழி என்பது இவருக்கு இயல்பாக அமையப்பெற்ற ஒன்று. பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், மதுரைப் பல்கலைக் கழகத்திலும் உயர் கல்விப்பட்டங்கள் பெற்று, மேற்கல்விக்கு ஜப்பான் சென்றார். அங்கிருந்து பின் ஜெர்மனிக்கு வேலை நிமித்தம் இடப்பெயற்வுற்று நீண்ட நாட்கள் அங்கே பேராசிரியராக வேலை செய்து அந்நாட்டுக் குடியுரிமை பெற்றார். அதே சமயம் இந்தியக் குடியுரிமையை Overseas Citizen of India எனத் தக்க வைத்துள்ளார். மேலும் இவர் கொரியாவில் ஆசியபசிபிக் நாடுகளின் கடலாய்வு பயிற்சி மையத்தை எட்டு ஆண்டுகள் பரிபாலித்து வந்தார். தற்சமயம் மலேசியாவிலுள்ள புத்ரா பல்கலைக்கழகத்திலும், டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக வேலை பார்த்திருகிறார். மேலும் எம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் சிறப்பு (கௌரவ)ப் பேராசிரியராகப் பணி புரிகிறார்.

இவர் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்

இவரின் ஆய்வுக்கட்டுரைகள் இங்கே

https://scholar.google.com/citations?user=TlpVWukAAAAJ&hl=en

சுற்றுப்புற சூழல் மாற்றம் காரணமாக எவ்வாறு நோய் பரவுகிறது என்பதையும் அடுத்து நாம் செய்யவேண்டியதையும் நமக்கு எளிதாக விளக்கஉள்ளார்.
நாளை மாலை 7.30 மணி அளவில் அவர் நமக்கு இணையம் வழியே உரையாற்ற உள்ளார். நீங்களும் அவரிடம் கேள்விகள் கேட்கலாம். 6.00 மணிக்கு இணைய உரையாடலின் இணைப்பு உங்களுக்கு அனுப்பப்படும். மேலும் விபரங்களுக்கு நாளை பத்திரிக்கை.காம் இணையத்தளத்தினை காணுங்கள்

உங்கள் நேரத்தினை அடுத்த சந்ததிக்கு எப்படியெல்லாம் பயனுள்ளதாக மாற்றலாம் என்பதையும் தெரிந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்

செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி