நெய்வேலி: 

நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பேரணி நடத்தி வருகின்றனர்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தண்ணீர்  திறந்துவிட மறுக்கும் கர்நாடகத்திற்கு, நெய்வேலியில் இருந்து  மின்சாரம் கொடுப்பதை எதிர்த்தும், நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகையிடப் போவதாக தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி மீட்புக் குழு மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி  ன்று காலை முதலே விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கா னோர் என்எல்சி மருத்துவமனை  அருகே குழும தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து. பேரணியை பழ.நெடுமாறன் தொடங்கி வைக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

பேரணி என்எல்சியை நோக்கி முற்றுகையிட சென்றது. அப்போது, பேரணியில் பங்கேற்றவர்கள்,   மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடகத்திற்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் தர எதிர்ப்புத் தெரிவித்தும் பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டும் சென்றனர்.

ஆனால், பேரணி  கியூபாலத்தை தாண்டி பேரணி அனுமதிக்படவில்லை.  எனவே அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று என்எல்சி முற்றுகை போராட்டம் காரணமாக,  டிஐஜி, எஸ்பி, ஏடிஎஸ்பி மற்றும் 8 டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் 30 பேர், சப்இன்ஸ்பெக்டர்கள் 85 பேர், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.