ஆதார் இல்லாவிட்டால் அரசு சலுகைகள் கிடைக்காது!! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி :

ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால் சமூக நலத் திட்டங்களின் கீழ் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ar

உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ஆதார் எண் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தெரிவித்துள்ள பதிலில், ‘‘சமூக நல திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் வசதி இல்லாதவர்கள் தொடர்ந்து சலுகைகளை பெற முடியும். ஆனால் வசதிகள் இருந்தும் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான அவகாசத்தை ஜூன் 30 க்கு பிறகு நீட்டிக்க முடியாது. ஏனேனில் ஏற்கனவே 95 சதவீதம் பேர் தங்களின் ஆதார் எண்ணை அரசு திட்டத்தில் பதிவு செய்து விட்டனர். அதனால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை .

பான் கார்டு வாங்க ஆதார் கட்டாயம். வருமான வரி செலுத்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பவற்றிற்கு மட்டும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதால், சமூக நல திட்டங்களின் கீழ் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு தொடரும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.