கொல்கத்தா,

கல்விக்கு தடை ஏதும் இல்லை, எந்த வயதிலும் படிப்பைத் தொடரலாம் என்பதை மேற்கு வங்கத்திலிருக்கும் குடும்பம் ஒன்று நிரூபித்துள்ளது.

மேற்குவங்கத்திலிருக்கும் நாடியா மாவட்டத்தில் உள்ளது ரனகாட் நகர். இங்குள்ள பள்ளி ஒன்றில் பிப்லாப் மோண்டல் என்ற மாணவன் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதவந்தான். இது ஆச்சரியமில்லை. இவனுடன் அவனது தாயும் தந்தையும் தேர்வு எழுதவந்ததுதான் இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது. சாதாரண மண்குடிசையில் வாழ்ந்துவரும் மோண்டலின் பெற்றோருக்கு படிக்காமல் போனது வருத்தமாக இருந்துள்ளது.

பள்ளியில் சேர்ந்து படிக்க அவர்கள் விரும்பினாலும் வயதை காரணம் காட்டி பள்ளிகள் சேர்க்க மறுத்தன. கடைசியாக தன் மகன் படித்த பள்ளியிலேயே +2 படிப்பில் சேர்ந்து படித்துள்ளனர். வறுமையான சூழலிலிருந்து அவர்களை கல்விச் செல்வம் காப்பாற்ற வேண்டும் என அவர்கள் வாழும் பகுதி மக்கள் வாழ்த்தினார்கள்.