பெல்ஜியத்தில் விமான போக்குவரத்து முடக்கம்

பிரசெல்ஸ்:

பெல்ஜியம் விமான போக்குவரத்து சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் வழக்கமான பணிகள் முடங்கின.

விமானம் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வான் போக்குவரத்து எல்லையை மூடி பெல்ஜியம் அறிவித்துள்ளது.

இதனால் விமானங்கள் புறப்பட முடியாமலும், தரையிறங்க முடியாமலும் தவித்தன. பெல்ஜியம் வான் எல்லையை பயன்படுத்தும் விமானங்கள் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டன. தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.