சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை : மாயாவதி

க்னோ

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்ட்ப்பேரவை தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்துள்ளார்.

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.   இந்தக் கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணையும் என இரு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அஜித் ஜோகியுடன் கூட்டணி என  மாயாவதி அறிவித்தார்.   மேலும் அஜித் ஜோகியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தார்.    இது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.   தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன.     இந்த தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுடன் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அதை மாயாவதி மறுத்துள்ளார்.  அவர், “சத்தீஸ்கரை போல மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் காங்கிரசுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்காது.   அந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட ஆலோசித்து வருகிறோம்.   காங்கிரஸ் எங்களை அழிக்க நினைப்பதால் நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாயாவதி மரியாதையான அளவுக்கு தொகுதி ஒதுக்கவில்லை எனில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.